பெரம்பலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இதமான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பெரம்பலூர் நகரில் பரவலாக மழை பெய்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி அதிகாலை வரை பெரம்பலூர் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

எளம்பலூர், துறைமங்கலம், குரும்பலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும், அன்னமங்கலம், அரும்பாவூர், பூலாம்பாடி, மலையாளப்பட்டி உள்ளிட்ட பச்சைமலை அடிவார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

நீர்வரத்து

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

செட்டிகுளம்-4, பாடாலூர்-4, அகரம்சீகூர்-12, லெப்பைக்குடிகாடு-50, புதுவேட்டக்குடி-26, பெரம்பலூர்-40, எறையூர்-70, கிருஷ்ணாபுரம்-23, தழுதாழை-104, வி.களத்தூர்-36, வேப்பந்தட்டை-30. மொத்தம் 399 மி.மீ. சராசரியாக 36.27 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

பச்சைமலை அடிவாரத்தில் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை உழவுப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அக்னி நட்சத்திரம் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக கோடை மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் நகர்ப்புற பொதுமக்கள் கோடை வெப்பத்தில் இருந்து சற்று விடுபட்டுள்ளனர்.


Next Story