வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை


வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x

வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வேலூர்

வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

பின்னர் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் சுமார் 45 நிமிடங்கள் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளித்தது.

மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.


Next Story