தென்காசியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
தென்காசி, கடையநல்லூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தென்காசி
தென்காசியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. நேற்றும் பகலில் வெயில் கடுமையாக இருந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதேபோல் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடையநல்லூர், அச்சன்புதூர், இடைகால், நயினாரகரம், கொடிகுறிச்சி, வடகரை, போகநல்லூர், வலசை, கம்பனேரி, மங்களாபுரம், கருப்பாநதி அணை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story