காற்றுடன் பலத்த மழை


காற்றுடன் பலத்த மழை
x

ஆற்காடு, மேல்விஷாரத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் இரவு ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் புகுந்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.


Next Story