1 மணி நேரம் காற்றுடன் கூடிய கனமழை
திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
திருவாரூர்:
திருவாரூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கன மழை
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் குளிர்பானங்கள் அருந்துவதும், குளிர் பிரதேசங்களை தேடியும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்கும் வகையில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் மந்தமான நிலையில் காணப்பட்டது.இரவு 8 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து பெய்த சாரல் மழை கனமழையாக மாறியது.இந்த மழையால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் பணி முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் பொழுது மழையில் நனைந்து கொண்டு சென்றனர்.
மழைநீர் தேங்கி நின்றது
சிலர் சாலையோரங்களில் உள்ள வங்கி ஏ.டி.எம்.கள், சிறு, சிறு கடைகள் உள்ளிட்டவற்றில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.கனமழையின் போது திருவாரூர் கீழ வீதியில் குடையை பிடித்துக் கொண்டு தனது ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவர் காற்றின் வேகம் தாங்காமல் நிலை தடுமாறினார்.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்றது.