நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை:


நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை:
x

நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை:

நாகப்பட்டினம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டது. இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் கடந்த 30-ந்தேதி 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். நேற்று 2-வது நாளாக நாகை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நாகை மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story