சென்னையில் கனமழை: அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் கேட்டறிந்தார்.
சென்னை,
சென்னையில் நேற்று முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த தொலைப்பேசி அழைப்பை எடுத்து, பொதுமக்களிடம் குறைகளை முதல் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து, மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், மழை நீர் அகற்றம் தொடர்பாக சென்னை முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.