சேரங்கோடு பகுதியில் பலத்த மழை:கோவில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது
சேரங்கோடு பகுதியில் பலத்த மழை:கோவில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது
நீலகிரி
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்களும் சேதமானது. இதேபோல் நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் சேரங்கோடு பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் கோவில் சேதமானது. அப்போது கோவிலுக்குள் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியதால் உயிர்தப்பினார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று கோவில் மீது விழுந்து கிடந்த மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கோவில்மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story