கரூர் பகுதியில் 2-வது நாளாக சாரல் மழை
கரூர் பகுதியில் 2-வது நாளாக சாரல் மழை பெய்தது.
கரூர்
கரூரில் நேற்று 2-வது நாளாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் சுமார் 1 மணி அளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சாரல் மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் பகுதிகளில் நேற்று 2-வது நாளாக காலையில் இருந்து மாலை வரை இடைவிடாமல் சாரல் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கருர் - 16.2, அரவக்குறிச்சி -13, அணைப்பாளையம்- 3.2, க. பரமத்தி-1.8, குளித்தலை -4, தோகைமலை -2, கிருஷ்ணராயபுரம் - 5, மாயனூர்-13, பஞ்சப்பட்டி -3.6, கடவூர் -21, பாலவிடுதி -5.1, மைலம்பட்டி- 3.2.
Related Tags :
Next Story