மன்னவனூர் பகுதியில் கடும் உறை பனி


மன்னவனூர் பகுதியில் கடும் உறை பனி
x
தினத்தந்தி 13 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-14T00:30:53+05:30)

மன்னவனூர் பகுதியில் கடும் உறை பனி

திண்டுக்கல்


கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான குளிருடன் கூடிய உறைபனி நிலவி வருகிறது. நகர் பகுதியில் மட்டுமே ஏற்பட்டு வந்த இந்த பனியின் தாக்கம் தற்போது மேல்மலை கிராமங்களிலும் அதிக அளவு காணப்படுகிறது. குறிப்பாக மன்னவனூர், எழும்பள்ளம் ஏரிபகுதி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை முதலே உறைபனி ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களிலும் கடும் உறை பனி நிலவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளைக்கம்பளம் விரித்தது போல் மாறிவிட்டது. உறைபனி காரணமாக பயிர்கள் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் வாகனங்களிலும் டீசல் உறைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.


இதனிடையே கொடைக்கானல் நகர் பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில் கடுமையான உறை பனி ஏற்பட்டது. இதில் நட்சத்திர ஏரிப்பகுதியில் சுமார் 3 டிகிரி அளவு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.Next Story