சீர்காழி பகுதியில் கடும் பனிப்பொழிவு
சீர்காழி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா. இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story