'ஹலோ நண்பாஸ் மற்றும் நண்பிஸ்' - இன்ஸ்டாகிராமில் களமிறங்கிய நடிகர் விஜய்...!
நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்டை தொடங்கி உள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வாரிசு திரப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் சமூக வலைதள பக்கங்களில் டுவிட்டர் கணக்கை மட்டும் கொண்டிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்டை தொடங்கி உள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட முதல் பதிவில், 'வணக்கம் நண்பாஸ் மற்றும் நண்பிஸ்' என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story