ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x
திருப்பூர்


சாலை பாதுகாப்பு வார விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் பேசினார். பிறகு போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தனர். அதனை கொடியசைத்து நீதிபதி தர்மபிரபு தொடங்கி வைத்தார். இந்த பேரணி அலங்கியம் ரவுண்டானா, உடுமலை சாலையில் ரவுண்டானா மற்றும் பஸ் நிலையம் வழியாக திருப்பூர் சாலையில் சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

சாலை விழிப்புணர்வு விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை பொதுமக்களுக்கு குற்றவியல் நீதிபதி எஸ்.பாபு, போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தாராபுரம் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.மணிவண்ணன். வழக்கறிஞர் சங்க தலைவர் கலைச்செழியன், செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் உள்பட பலர் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story