ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
x

கரூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்

இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி கரூர் மாவட்ட இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் அனைத்து கிளை சங்கங்கள் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலமானது கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் இருந்து தொடங்கி பழைய திண்டுக்கல் சாலை, மனோகரா கார்னர், மேற்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் சாலை வழியாக சென்று கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story