எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகை செடிகள்-அதிகாரி தகவல்


எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகை செடிகள்-அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகை செடிகள் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகைச் செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகின்றன. 10 வகையான மூலிகைச்செடிகள் தலா 2 வீதமும், செடி வளர்ப்பு பைகள் 10, மண்புழு உரம் 4 கிலோ, தொழில் நுட்ப கையேடு உள்ளிட்ட தொகுப்பிற்கு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. விரும்புவோர் ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றுடன் எஸ். புதூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.


Next Story