வேதாரண்யம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் மூலிகை வனம் அமைக்கும் பணி
வேதாரண்யம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் மூலிகை வனம் அமைக்கும் பணி நடந்தது.
வேதாரண்யம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் மூலிகை வனம் அமைப்பதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பவுலின், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வல்லாரை, கரிசலாங்கண்ணி, சித்தரத்தை, மலைவேம்பு, மின்னல் கீரை, நித்திய கல்யாணி உள்பட 76 வகையான மூலிகை செடிகளையும், 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் நட்டு, அதன் பயன்களை கேட்டறிந்தார். தொடர்ந்து 8 பேருக்கு பட்டா மாற்ற நகல், குடும்ப அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் புகழேந்தி, ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், மாநில கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன், மூலிகை பண்ணையாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் துணை தாசில்தார் வேதையன், மூலிகை செடிகளை நட்டு அதன் பெயர் பலகையும் வைத்து உள்ளார். இதற்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.