விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம்


விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:32+05:30)

சூளகிரி அருகே விவசாய நிலங்களில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே விவசாய நிலங்களில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

யானைகள் அட்டகாசம்

கர்நாடக வனப்பகுதியில் இருந்து நேற்று 30-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் உணவுக்காக காட்டை விட்டு வெளியேறி கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தன. இவைகள் வயல்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டினர். தற்போது, போடூர் வனப்பகுதியில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விடுமோ? என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்திருப்பதால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள போடூர்பள்ளம், ஆழியாளம், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பாத்தாகோட்டா, ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு ஓட்டி செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு சூளகிரி அருகே விவசாய நிலங்களில் யானை கூட்டம் சுற்றித்திரிவதால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story