மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்


மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

கண்காட்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேளாண் துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் சேகர் வரவேற்றார்.

பாரம்பரிய நெல் சாகுபடி

தொடர்ந்து மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசினார். அப்போது பாரம்பரிய ரகங்கள் மற்றும் அரசின் புதிய திட்டங்கள், விதை உற்பத்தி, பாரம்பரிய நெல் சாகுபடி முறைகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் மதியரசன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுதா, நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மணிமாறன், விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா ஆகியோர் பேசினர்.

இந்த கருத்தரங்கில் வேளாண்மை உதவி இயக்குனர்கள் ராஜராஜன், எழிலரசன், வேளாண்மை அலுவலர் கிருத்திகா, வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர்கள் ஜெயக்குமார், முருகன், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடை நம்பி, முன்னோடி விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் இணை இயக்குனர் ஜெயபாலன் நன்றி கூறினார்.


Next Story