பாரம்பரிய சிறப்பு கண்காட்சி


பாரம்பரிய சிறப்பு கண்காட்சி
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை பள்ளியில் பாரம்பரிய சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகள் சார்பில் நெல்லை பாரம்பரிய சிறப்பு கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் ஞானமணிதுரைச்சி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை தாமரைச்செல்வி வரவேற்றார். 7-ம் வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து கண்காட்சியில் வைத்திருந்தனர். நெல்லையப்பர் கோவில், தாமிரபரணி நதிக்கரை, சுலோச்சன முதலியார் பாலம், திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், வ.உ.சி நினைவிடம், பாளையங்கோட்டை சிறைச்சாலை, சந்திப்பு ெரயில் நிலையம் குறித்து மாணவ-மாணவிகள் கண்காட்சி அமைத்து இருந்தனர். மேலும் பனங்கிழங்கு, நுங்கு, பதநீர் உள்பட பனை உணவுப் பொருட்கள், பனைஓலை கைவினைப் பொருள்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.





Next Story