வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்


வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஜனவரி 24-ந் தேதி அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசால் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது. இந்த விருதுபெற 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட தகுதி உள்ளவர்கள் தகுதியானவர்கள் ஆவர். மேற்கண்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பித்த கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலகம் திருச்சி என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க இறுதிநாள் நவம்பர் மாதம் 15-ந் தேதியாகும். இறுதிநாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த தகவலை கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


Next Story