உயர்கல்வி- வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி
உயர்கல்வி- வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளித்தலைமையாசியர் சிவசாமி தலைமை தாங்கினார். உதவித்தலைமை ஆசிரியர் விஜயன் வரவேற்று பேசினார். நான் முதல்வன்-உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி குறித்து உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி தூதுவர் முதுகலை ஆசிரியர் குப்புசாமி, மாயனூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கூறப்பட்ட கருத்துக்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறினார்.கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மாவட்ட அளவில் நடைபெறும் நான் முதல்வன்- கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு மேல்நிலை 2-ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்களை பெற்றோர்களுடன் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவித்தலைமையாசிரியர் பொன்னுசாமி நன்றி கூறினார்.