சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு


சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
x

சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

தமிழக முதல் - அமைச்சர் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் கடலூர் - சித்தூர் சாலையை ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை - அத்திப்பாக்கம் இடையிலான 19.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலையில் 34 சிறுபாலங்களும், 3 பெரிய பாலங்களும் கட்டும் பணி நடந்து வருகிறது.

சாலை பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆராய்ச்சி துறையின் இயக்குனர் ஆர்.கோதண்டராமன் நேற்று நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருவண்ணாமலை சென்னை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கீழ்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை பணியையும் தானிப்பாடி- அரூர் சாலையை விரிவாக்கம் பணியையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ''ஆந்திராவில் இருந்து திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது. ஏற்கனவே இருவழிச் சாலையாக இருந்ததை தற்போது 4 வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே இந்த சாலை பணிகள் நிறைவடையும்'' என்றார். அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர்கள் முரளி, ஞானவேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் உள்பட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story