மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அஜய்கோஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்லையா முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தயாளன், மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் சம்பவம் மற்றும் அந்த மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் புளின்கால்வாய், நல்லூர்க்காடு வளவு, கவர்ச்சி கொம்பு, கடையமலை, எடுத்துரைக்காடு, பெரியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story