மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகை


மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகை
x

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் மணிமாறன், செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் திருவண்ணாமலை தாலுகா மேலத்திக்கான் எம்.ஜி.ஆர். நகர் இருளர், பழங்குடி குடும்பத்தினரை நிலத்தில் இருந்து அகற்றி அபகரிக்க முயற்சிக்கு அதிகாரிகளை கண்டித்தும், அனுபவ பாத்திய அடிப்படையில் 7 குடும்பத்தினர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தாசில்தார் சுரேஷ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலந்து சென்றனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பலராமன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story