இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க கூட்டம்


இந்து ஆட்டோ தொழிலாளர்கள்   முன்னணி சங்க கூட்டம்
x

தூத்துக்குடியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி அழகேசபுரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து ஆட்டோ முன்னணி மாநில தலைவர் மணலி மனோகர், மாநில பொருளாளர் மூர்த்தி, மாநில துணை பொதுச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகணேஷ், மாவட்ட பொறுப்பாளர்கள் மாரியப்பன், சுப்பராயலு, முத்துப்பாண்டி, மணிவண்ணன், சுரேஷ்குமார், சக்திவேல், முண்ட சாமி, சுயம்புலிங்கம், சந்திரசேகரன், திருப்பதி, வெங்கடேஷ், மீனாட்சி சுந்தரம், அய்யப்பன், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சரவணக்குமார், சிவலிங்கம், ராகவேந்திரா, பலவேசம், நாராயணராஜ், கவி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story