தூத்துக்குடியில்இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்


தூத்துக்குடியில்இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி பண்பு பயிற்சி முகாம் டூவிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமுக்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் சொர்ண சுந்தரி திருவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா கலந்து கொண்டு பேசினார்.

முகாமில் மாவட்ட பொதுச் செயலாளர் வி.நாராயணன் ராஜ், மாவட்ட செயலாளர்கள் எல்.ஆர்.சரவணகுமார், கே.எஸ்.ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம், மாவட்ட துணை தலைவர் நா.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பலவேசம், ஜி.மாரியப்பன், ஆர்.வினோத்குமார், ஆ.கவின் சண்முகம், மேற்கு மண்டல பொறுப்பாளர்கள் சுதாகர், ஆறுமுகம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொறுப்பாளர் சிபு, சுடலைச்செல்வம், இந்து முன்னணி வக்கீல் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ்.கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story