மின் வாரியத்துக்கு இந்து முன்னணி கோரிக்கை


மின் வாரியத்துக்கு இந்து முன்னணி கோரிக்கை
x

தை அமாவாசையையொட்டி மின் வாரியத்துக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி

இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா, தமிழ்நாடு மின்சார வாரிய நெல்லை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை தை அமாவாசை ஆகும். இதையொட்டி இந்துக்கள் தங்களுடைய முன்னோர்களை வழிபட்டு, விரதம் மேற்கொண்டு பூஜைகள் செய்வது வழக்கம் ஆகும். அதனால் நாளை மின்தடை செய்தால் மிகவும் சிரமம் ஏற்படும். எனவே தை அமாவாசை தினத்தன்று மின்தடை ஏற்படுத்தாமல், வேறு தேதியில் மின்பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story