இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலை கோபி, கோட்ட பொறுப்பாளர் உமேஷ், மற்றும் செயலாளர்கள் கேசவன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் நாகராஜ், விசுவ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story