பாரதியார் சிலைக்கு இந்து முன்னணி மாலை அணிவித்து மரியாதை
எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு இந்து முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பாக எட்டயபுரத்தில் பாரதியார் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், எட்டயபுரம் நகர செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விளதை கணேசன், சங்கரவேல், வெங்கடேஷ், எட்டயபுரம் நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story