இந்து முன்னணி மாநில தலைவர் சாமி தரிசனம்


இந்து முன்னணி மாநில தலைவர் சாமி தரிசனம்
x

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்

சேலம்:சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துக்களின் உரிமை மீட்பு பிரசாரத்தை கடந்த மாதம் திருச்செந்தூரில் தொடங்கினேன். வருகிற 31-ந் தேதி இந்த பயணம் சென்னையில் நிறைவு பெறுகிறது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்ததற்கு சரியான நீதி விசாரணை வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த கலவரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவர்களின் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. திருப்பூர், கோவையில் வங்காளதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் அதிகம் பேர் உள்ளனர். தேனி, கம்பம் பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கின்றது. இதனால் அவர்களால் கலவரங்கள் வர வாய்ப்புள்ளதால் உளவுத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story