இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:34+05:30)

கமுதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

கமுதி,

இந்துக்களை தொடர்ந்து இழிவாக பேசியதாக ஆ.ராசாவை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி கமுதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருமாள் கோவில் திடல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சேர்மன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய துணைத்தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் ஜோதி, முத்துராமலிங்கம், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்.ஆறுமுகம், அழகுமலை, எஸ்.கே.தேவர், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story