விழுப்புரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து விழுப்புரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம், செப்.19-

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து தாய்மார்களை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, கோட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் ராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் காந்தி, பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், வெங்கட், செயற்குழு உறுப்பினர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story