ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

இந்து மதத்தை இழிவுபடுத்தியும், இந்துக்கள் மனதை புண்படுத்தியும் பேசி வருவதாக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட துணை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவரத்தினம், மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி கோட்ட செயலாளர் குணசேகர், ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் ராசாவை கைது செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக அமைப்பின் பெரம்பலூர் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் பழனிசாமி நன்றி கூறினார்.


Next Story