தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்த இந்து முன்னணியினர் கைது
ஆரணியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை
ஆரணி
திரைப்பட நடிகரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் என்பவர் பெரியாரை அவமதிப்பு செய்து பேசியதாக போலீசார் கைது செய்தனர்.
அதனை கண்டித்து ஆரணி நகர இந்து முன்னணி இளைஞர் அணி நகர செயலாளர் விக்னேஷ் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டு வந்தனர்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், பி.புகழ் மற்றும் போலீசார் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
Related Tags :
Next Story