இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sept 2023 4:30 AM IST (Updated: 8 Sept 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதி இந்து முன்னணி சார்பில், மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பழனி பகுதி இந்து முன்னணி சார்பில், மயில் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 40 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story