திருச்செந்தூரில்இந்து மக்கள் கட்சி கூட்டம்


திருச்செந்தூரில்இந்து மக்கள் கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில்இந்து மக்கள் கட்சி கூட்டம் நடந்தது,

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த் விநாயகர் கோவிலில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, அனுமன் சேனா தெற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை சுற்றி திருவிழா காலங்களில் குப்பைகளை எடுப்பது போல் நடப்பு காலங்களிலும் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு தனி தரிசனம் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். திருச்செந்தூர் அருகே சண்முகபுரம்-முத்துநகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், அனுமன் சேனா ஒன்றிய தலைவர் பேச்சிமுத்து, இந்து மக்கள் கட்சி ஒன்றிய அமைப்பாளர் சிவலிங்கம், துணை தலைவர் சக்திகுமார், நகர தலைவர் துரைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story