இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் பக்தபுரி ரவுண்டானா அருகே மீன்பிடி வலை, பொம்மை துப்பாக்கி, தேசியக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ் முன்னிலை வைத்தார். இதில் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கச்சத்தீவை மீட்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை கும்பகோணம் கிழக்கு போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story