இந்து மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு


இந்து மக்கள் கட்சி   புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாரட்ட இந்து மக்கள் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

வைத்திலிங்கபுரம்:

உடன்குடி அருகேயுள்ள வைத்திலிங்கபுரம் இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி அனுமன்சேனாவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர் லிங்கவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக தங்கராஜ், செயலராக குணசீலன், ஒன்றிய தலைவர்களாக சின்னத்துரை (உடன்குடி), ராஜேஷ் (திருச்செந்தூர்) ஓன்றிய துணைத்தலைவராக சக்திகுமார், உடன்குடி நகர தலைவராக அந்தோணி, துணைத்தலைவராக சின்னத்துரை, திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளராக மற்றொரு சின்னத்துரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலர் ரவிகிருஷ்ணன், ஆலய பாதுகாப்பு பேரவை மாநில செயலர் சு.பாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டம் முழுவதும் போதைபொருள் விற்பனை நடைபெறுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும், திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள இடை சீர்திருத்தங்களை வரவேற்கிறோம்.தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உட்பட பலதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story