பாலத்தில்இருந்து குதித்த ரவுடியின் கை முறிந்தது


பாலத்தில்இருந்து குதித்த ரவுடியின் கை முறிந்தது
x

பட்டுக்கோட்டை அருகே போலீசாரை கண்டதும் பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கை முறிந்தது. இதனால் அவர் சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே போலீசாரை கண்டதும் பாலத்தில் இருந்து குதித்த ரவுடியின் கை முறிந்தது. இதனால் அவர் சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார்

பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கலைமணி. இவருடைய மகன் கபி என்கிற கபிலன் (வயது24). இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறார்.இவரை போலீசார் பல்வேறு வழக்குகளில் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி பட்டுக்கோட்டை நகர சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் மகாராஜ சமுத்திரம் காட்டாறு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கபிலன் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்தார்.

கை முறிந்தது

போலீசாரை கண்டதும் கபிலன் தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்தி சென்றனர். அப்போது கபிலன் காட்டாற்று பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். இதில் அவரது வலது கை முறிந்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் அவரை போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story