வரலாற்று பாடப்பிரிவை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பில் வரலாற்று பாடப்பிரிவை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர்;
திருவாரூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு வரலாறு பாடப்பிரிவு நீக்கப்பட்டு உள்ளதை கண்டித்தும், வரலாற்று பாடப்பிரிவை தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் பொதுநல அமைப்புகள், முன்னாள் மாணவர்கள் சார்பில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய துணை தலைவர் அழகிரிசாமி தலைமை தாங்கினார்.விஜயபுரம் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆா்ப்பாட்டத்தில் நகர மேம்பாட்டுக்குழு தலைவர் அருள், நிர்வாகிகள் சீனிவாசன், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story