லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் படுகாயம்


லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:00:47+05:30)

நீடாமங்கலம் அருகே லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி உதவி பேராசிரியர் படுகாயம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 38). இவர் நீடாமங்கலம் கீழராஜவீதியில் வசித்து வருகிறார். கோவில்வெண்ணியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர், சம்பவத்தன்று இரவு நீடாமங்கலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் முடுக்குதோப்பு பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தினேஷ் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த தினேசை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story