பதுக்கி வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கூடலூரில் கடையில் பதுக்கி வைத்திருந்த 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
தேனி
கூடலூர் கூலிக்காரன் பாலம் பகுதியில் கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் கூடலூர் கே.வி.ஆர்.சந்து தெருவை சேர்ந்த சுப்பிரமணி (வயது 60) என்பவர், பெட்டிக்கடையில் 7 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.
Related Tags :
Next Story