இன்று உள்ளாட்சி அமைப்பு தேர்தல்: வாக்களிக்கும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்-தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் உத்தரவு
இன்று உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடப்பதையொட்டி வாக்களிக்கும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
நாமக்கல்
நாமக்கல்:
சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் இன்று விடுப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வகையில் இன்று தவறாது ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். ஊதியத்துடன் விடுப்பு வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story