குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத 94 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி

சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி ஆகியோர் அறிவுறுத்தலின்படி தேசிய விடுமுறை நாளான குடியரசு தினத்தன்று பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் கூட்டாய்வு நடத்தினர். 145 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டதில் 94 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.


Next Story