திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
x

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வந்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை 8 மணி வரை பெய்தது.

கனமழை காரணமாகவும், மாணவ-மாணவிகள் நலன் கருதியும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

மழை அளவு

நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

திருவாரூர்-13, நன்னிலம்-11, குடவாசல்-27, வலங்கைமான்-33, மன்னார்குடி-12, நீடாமங்கலம்-18, பாண்டவையாறு தலைப்பு-14, திருத்துறைப்பூண்டி-16, முத்துப்பேட்டை-5.


Next Story