புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
முக்கூடல்:
சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழா 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
முன்னதாக மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மாற்பவுலோஸ்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, சிங்கம்பாறை கெபியில் இருந்து ஊர்வலமாக வந்து ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன்மகாதேவி பங்கு பணியாளர் மரிய பிரான்சிஸ், வீரவநல்லூர் ஆரோக்கியராஜ், தூய ஆரோக்கிய மாதா, வேளாங்கண்ணி மாதா, தூய மிக்கேல் அதிதூதர் அன்பியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஊர் பொறுப்பாளர்கள் தலைமையில் மக்களோடு இணைந்து ஆயரால் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் 9 அருள் பணியாளர்கள் இணைய, ஆடம்பர கூட்டத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டிலிருந்தும் அதாவது ஜெர்மனியில் இருந்து 30 பேர் வந்து கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான அருள் பணியாளர் ஜெரால்ட் திருப்பலியில் கலந்து கொண்டார்.
கொடியேற்ற விழாவில் முக்கூடல் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சமபந்தி உணவு வழங்கப்பட்டது. அனைத்து பங்குத்தந்தை, அருள்பணி அருள், நேசமணி ஊர் பொறுப்பாளர்கள், அன்பிய பொறுப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
8-ம் திருநாளன்று இரவில் நற்கருணை பவனியும், 9-ம் திருநாளன்று இரவில் தேர்பவனியும், 10-ம் திருநாளன்று காலையில் தேர்பவனியும், இரவில் கலைநிகழ்ச்சிகள், மின்னொளி கபடி போட்டியும் நடைபெறுகிறது.