தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றம் 16-ந்தேதி தேர்பவனி


தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றம்  16-ந்தேதி தேர்பவனி
x
தினத்தந்தி 9 Sept 2023 1:45 AM IST (Updated: 9 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற 16-ந்தேதி நடக்கிறது.

மதுரை


மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற 16-ந்ேததி நடக்கிறது.

கொடியேற்றம்

மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் புனித வியாகுல அன்னையின் 181-ம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முதலாம் நாளான நேற்று மாலை மதுரை உயர்மறை மாவட்ட செயல் முதல்வர் அலெக்ஸ் ஞானராஜ் அன்னையின் திருவுருவக் கொடியை அர்ச்சித்து, ஏற்றிவைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார்.

விழாவையொட்டி வருகிற 10-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை நவநாள் திருப்பலி நடைபெறும். நகரில் உள்ள அனைத்துப் பங்குகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும், மாணவ-மாணவியர், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள். இறைமக்கள் கூடி திருப்பலியில் பங்குபெறுவர்.

தேர்பவனி

அதேபோல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்னையின் தேர்பவனி வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.. தேர் பவனிக்கு மதுரை உயர்மறை மாவட்ட பேரவை பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறும்.

17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை திருவிழா நிறைவு மற்றும் நற்கருணை மாலை முடிவில் அன்பின் விருந்து நடைபெறும். பின்னர் புனித மரியன்னை பேராலய அதிபர் பங்குத்தந்தை மரியநாதன் தலைமையில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள் மரியநாதன் அலெக்சாண்டர்் ஜோசப் அலெக்ஸாண்டர் லேனின் மற்றும் பங்கு பேரவை, நிதி குழு, துறவியர், அன்பியங்கள், பக்த சபைகள், இயக்கங்கள், பங்கு இறைமக்கள், மரியன்னை ஏசு சபை குழுமம் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story