ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்: 12 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோபுர கலசங்களில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏராளமான பக்தர்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக, மலைக்கோவிலுக்கு கொண்டு சென்றனர். மேலும் ஒரு வேனிலும், நதிகளின் நீர் நிரப்பப்பட்ட கேன்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதில், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story