மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்
பேராவூரணி;
ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பேராவூரணி வட்ட ெரயில் பயணிகள் சங்கம் சார்பில் பேராவூரணி ெரயில் நிலையம் எதிரில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ெரயில் பயணிகள் சங்க தலைவர் மெஞ்ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் பாரதி நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ெரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பேரை ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உயரிழந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டி மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story