தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு வீடு
தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு வீடு வழங்கப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் வட்டம் மேல முனையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா. இவர் ஆதரவற்ற நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன், இலவச வீட்டுமனை கேட்டு நேற்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 2 பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நேரு நகர் தோரணக்கல்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புடைய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பங்களிப்பு தொகையினை தனது சொந்த விருப்புரிமை நிதியிலிருந்து கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4,000 வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த குடும்பத்தை சேர்ந்த பெண்குழந்தைகளின் நலன் கருதி இந்த வீடு கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது.